தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியற் கட்சியாக பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும் – இரா.சம்பந்தனிடம் வேட்பாளர் சிவநேசன்-

bawan“தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமான அரசியற் இயக்கமாக இயங்கவேண்டுமாயின் கூட்டமைப்பை ஒரு அரசியற் கட்சியாக பதிவுசெய்ய வரும் நாட்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஐயாவிடம் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்” என வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பாளாராக போட்டியிடும் திரு.கந்தையா சிவநேசன் (பவன்) 10.08.2015 அன்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் ஓர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று அமைப்புக்களாக புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு சம்பந்தமாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன. கூட்டமைப்பின் பதிவு சம்பந்தமான இவ் அமைப்புக்களின் நிலைப்பாட்டினை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அநேகமான அமைப்புக்களும், அரசியல் ஆரவலர்களும் வரவேற்று அவதானித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 77ஆவது பிறந்ததின விசேட பூஜை-(படங்கள் இணைப்பு)

அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 77 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு கொழும்பு குமார் பொன்னம்பலம் நினைவுக்குழு சார்பில் அதன் செயலாளர் நாயகமும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு தலைவருமான கலாநிதி என். குமரகுருபரன் அவர்கள் கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜையில் ஈடுபட்டார். அவருடன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் துணை செயலாளர் ஐயாசாமி இராமலிங்கமும்; கலந்துகொண்டிருந்தார். 

Read more