கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம்-(படங்கள் இணைப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்.மாவட்டத்தில் இலக்கம் 07 இல் போட்டியிடும் வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதன்போது வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடன், வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், ஜேர்மன் கிளைத் தோழர் ஜெகநாதன், நோர்வே கிளைத் தோழர் ராஜன் மற்றும் ஆதரவாளர்களும் தேர்தல் கருத்தரங்குகளை நடாத்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். சுழிபுரம், கைதடி, கோப்பாய், மாவட்டபுரம், நந்தாவில், நீர்வேலி, வியாபாரிமூலை கரவெட்டி, ஊரெழு, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. (இது குறித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)