போராளிகளையும் இணைத்து எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலம்மிக்க சக்தியாக்குவோம்- கூட்டமைப்பின் வேட்பாளர் க.சிவநேசன்(பவன்)-
தற்போது நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஏனைய அமைப்புக்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என புளொட் அமைப்பின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) நேற்று முன்தினம் (11.08.2015) முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் என்று எவரும் இல்லை, அனைத்து அமைப்புப் போராளிகளும் போராளிகளே. ஒரு காலத்தில் ஆயுதப் போராளிகளாக இருந்தவர்கள் இன்று சமூகப் போராளிகளாக தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர். புளொட் அமைப்பைச் சேர்ந்த நாம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சமூக ஜனநாயக போராளிகளாக எம்மை மாற்றினோம். அது போலவே புலிகள் அமைப்பின் போராளிகள் பலரும் இன்று தமது இனத்திற்காக தம்மை சமூக விடுதலைக்காக ஜனநாயக போராளிகளாக மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே தமிழர் நலனில் அக்கறை கொண்ட இனவாத அரசின் பின்னணிகள் எதுவும் அற்ற போராளிகள் அமைப்புக்கள் எதிர்காலத்தில் படிப்படியாக ஜனநாயக அரசியற் நடவடிக்கைகளின் கூட்டமைப்பால் உள்வாங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்கள் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில் நுட்பக்கல்லூரியில் பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்களது ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இலவச கருத்தரங்கின்போது, சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்களின் தன்னலம் அற்ற சேவையினைப் பாராட்டி நோர்வே நாட்டில் வசிக்கும் ஸ்கண்டிநேவியன் புகையிரத தொழில் நுட்பவியலாளரான யாழ். சுழிபுரத்தினைச் சேர்ந்த சிவராஜா இராஜசிங்கம் அவர்கள் சட்டத்தரணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.