கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சாவகச்சேரியில் தேர்தல் பிரசாரம்- (படங்கள் இணைப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்.மாவட்டத்தில் இலக்கம் 07 இல் போட்டியிடும் வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சாவகச்சேரி நகரப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் இளைஞர்கள் பலரும் அவருடன் கடைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கினார்கள்.