விடுதலைப் பயணத்தை தடையின்றித் தொடர கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்-வேட்பாளர் த.சித்தார்த்தன்-

sdfdfdfdதமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 7இல் போட்டியிடும் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூ;டடமப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நசுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். ஏனெனில் தென்னிலங்கைக் கட்சிகள் பெரும்பான்மை இன நலன்கள், அபிலாசைகளை பிரதிபலிப்பவை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை மதிப்பவை அல்ல. கடந்தகால வரலாறு இதனை நிரூபித்துள்ளது.

இதேவேளை தேர்தல் போட்டியிடும் ஏனைய சில தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நோக்கோடு போட்டியிடுகின்றன. தமிழ் தேசியவாதிகள் என காண்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை சின்னாபின்னப்படுத்தி தமிழ் மக்களின் பலத்தை உடைத்துவிடுவதற்கு அவை செயற்படுகின்றன. 

இவர்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லையென்பது வெள்ளிடைமலை. இவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த மாத்திரமே உதவும். எனவே இவர்களைத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தடையின்றி முன்னேறுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்டாயம் வாக்களித்து ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.