வன்முறையில் ஈடுபட்டால் தலையில் சுடுமாறு உத்தரவு-

mahindaநாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு சகல பொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது மிகவும் அவசியமென குறிப்பிட்ட அவர், இவற்றை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்குச்சாவடியின் வாக்களிப்பு ரத்துச்செய்யப்படும். அசம்பாவிதங்களைத் தடுக்க பொலிஸாருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் செய்திகளுக்கு Read more