Header image alt text

வாக்களிப்பு நிறைவு

Posted by plotenewseditor on 17 August 2015
Posted in செய்திகள் 

வாக்களிப்பு நிறைவு 

voteஇம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் – 60%
வன்னி – மன்னார் – 70%
மட்டக்களப்பு – 60%
திருகோணமலை – 75%
திகாமடுல்ல – 65%
கொழும்பு – 65%
கம்பஹா – 70%
கண்டி – 75%
மாத்தளை – 70%
நுவரெலியா – 70%
களுத்தறை – 65%
காலி – 70%
மாத்தறை – 70%
புத்தளம் – 66.5%
குருநாகல் – 68%
பதுளை – 70%
மொனராகலை – 65%
இரத்தினபுரி – 70-75%
அநுராதபுர – 65-70%
கேகாலை – 70-75

slfpஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய குழுவிலிருந்து 25 அங்கத்தவர்களை பதவிநீக்கம் செய்துள்ளார்.

மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கலான பட்டியலை ஜனாதிபதி நேற்றையதினம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பிவைத்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரைப் பதவிநீக்கம் செய்த ஜனாதிபதி சிறிசேன அவர்களின் இடத்திற்கு துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் விஸ்வா வர்ணபால ஆகியோரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பையடுத்து தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை கட்சியின் பொதுச்செயலாளர்களே தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கை தமக்கு நெருக்கமானவர்களை தேசியப்பட்டியல் மூலம் நியமிக்க வழிகோலிலுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

வாக்குப் பதிவு விகிதம் 2மணிவரை-

vote

காலி – 56விகிதம்

கம்பஹா – 62விகிதம்

அனுராதபுரம் – 60விகிதம்

மொனராகலை – 60விகிதம்

திருகோணமலை – 60விகிதம்

பொலன்னறுவை – 66விகிதம்

யாழ்ப்பாணம் – 60விகிதம்

கிளிநொச்சி – 70விகிதம்

வவுனியா – 60விகிதம்

மட்டக்களப்பு- 50விகிதம்

பதுளை 63விகிதம்

அம்பாறை – 60விகிதம்

தேர்தல் கடமையில் 30,000 கண்காணிப்பாளர்கள், 63,000 பொலிஸார்-

election monitorஇம்முறை தேர்தலுக்காக 30,000 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 130 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. நாடுமுழுவதும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹேட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இம்முறை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 63,000க்கும் அதிகமான பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவ சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இரவு 11.00 மணிக்கு பின் முதலாவது தேர்தல் முடிவு-

election.....இன்று இரவு 11.00 மணி முதல் நள்ளிரவுக்கிடையில் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிஇவுகளை வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். மேலும் நாளை மதியத்திற்குள் முழுமையான தேர்தல் முடிவுகளையும் மக்கள் அறியலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதோடு, மாலை 04.00 மணிவரை மக்கள் வாக்குகளை அளிக்க உள்ளனர்.

பலத்தை பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்-

policeதேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 75,000 த்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு-

flightஇந்தோனேசியாவில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்று மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூகினியா தீவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், பப்புவா நியூகினியா தீவுக்கு அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்தது. விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக சந்தேகம் நிலவியிருந்தது