தேர்தல் கடமையில் 30,000 கண்காணிப்பாளர்கள், 63,000 பொலிஸார்-
இம்முறை தேர்தலுக்காக 30,000 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 130 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. நாடுமுழுவதும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹேட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இம்முறை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 63,000க்கும் அதிகமான பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவ சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இரவு 11.00 மணிக்கு பின் முதலாவது தேர்தல் முடிவு-
இன்று இரவு 11.00 மணி முதல் நள்ளிரவுக்கிடையில் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிஇவுகளை வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். மேலும் நாளை மதியத்திற்குள் முழுமையான தேர்தல் முடிவுகளையும் மக்கள் அறியலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதோடு, மாலை 04.00 மணிவரை மக்கள் வாக்குகளை அளிக்க உள்ளனர்.
பலத்தை பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்-
தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 75,000 த்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு-
இந்தோனேசியாவில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்று மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூகினியா தீவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், பப்புவா நியூகினியா தீவுக்கு அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்தது. விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக சந்தேகம் நிலவியிருந்தது