வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி-

வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றிபெற்றோர் விபரம்
1. திரு. சார்ள்ஸ் நிர்மலநாதன் – 34620
2. திரு. செல்வம் அடைக்கலநாதன் – 26397
3. திரு. சிவசக்தி ஆனந்தன் – 25027
4. திரு. வைத்தியகலாநிதி சிவமோகன் – 18412
ஐக்கிய தேசியக் கட்சி
5. ரிசாத் பதியுதீன் – 26291
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
6. கே.கே மஸ்தான் – 7298