தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – பிரான்ஸ் கிளை
அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்!
முப்பது வருட போராட்டத்திற்கு பின்பும் எமது சமூகம் சலிப்படைந்து போனவர்கள் அல்ல என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான வெற்றி எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எமது கட்சி வேட்பாளர்களையும் அதிகப்படியான வாக்குகளால் வெற்றியடையச் செய்த உங்களுக்கு பிரான்ஸ் கிளை மனமார்ந்த நன்றிகளைத் தெரவித்துக் கொள்கின்றது.
மேலும், நாம் எமது நாட்டையும் எமது மக்களையும் விட்டுப்பிரிந்து எவ்வளவு தூரம் சென்று மேலைத்தேய நாடுகளில் இருந்தாலும்கூட உங்களை மறவாமல் எங்கள் பிரதிநிதிகள் ஊடாக சில சேவைகளை எங்களால் உங்களுக்கு செய்யக்கூடியதாக இருக்கின்றது. தொடர்ந்தும் எமது பணிகள் தொடரும்.
மேலும் இத்தேர்தலிலே எமது கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்கிய வேட்பாளர்களுள், திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோரை உங்கள் அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற செய்தமைக்கு அளவிலா மகிழ்சசியையம் அளவற்ற நன்றிகளையும் பிரான்ஸ் கிளையினராகிய நாம் மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
செ. ஜோன் திருச்செல்வம்
அமைப்பாளர்
பிரான்ஸ் கிளை
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (Pடுழுவுநு)
18.08.2015.
தொடர்புகட்கு: 0033753265173, 0033652388554, 0033753749321