தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – பிரித்தானிய கிளை-

PLOTEvஅன்பார்ந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்!

நடைபெற்று முடிந்த இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பெருமளவில் வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். 

வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்யாமலும், வாக்களிக்கத் தயங்காமலும் உங்களது முழுமையாக வாக்குகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் தமிழர் தேசியத்தின் பிரதிநிதித்துவம் பலமானதொன்றாக அமைய வழிசெய்திருப்பதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நீங்கள் மீண்டும் உறுதிசெய்துள்ளீர்கள். 

தற்போதைய சர்வதேச சாதகச் சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தியிருப்பது, தமிழ் மக்களது நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வினை நோக்கிய செயற்பாடுகளுக்கு வலுச் சேர்த்துள்ளது. 

மேலும் இத்தேர்தலிலே எமது கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுள், திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோர்க்கும் பெருமளவு வாக்குகளைச் செலுத்தி வெற்றிபெற செய்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சியையும் மனமார்ந்த நன்றிகளையம் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

பிரித்தானிய கிளை 

19.08.2015

ploteuk@gmail.com