வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு-

DSC_0190நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கும் எமது கட்சியின் கொள்கைகளுக்கும் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு கிடைத்த வாக்குகள் எமது அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன்.

எதிர்காலத்திலும் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த எமது அமைப்பின் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்பதையும், மாகாணசபை உறுப்பினர் என்ற முறையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அனைத்து செயற்திட்டங்களும் பாரபட்சமற்ற முறையில் பரந்த அடிப்படையில் செயற்படுத்தப்படும் என்பதனையும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் காலத்தில் எமது பிரச்சார நடவடிக்கைகளில் பங்கு கொண்ட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், பொது அமைப்புகளுக்கும், விளையாட்டு கழகங்களுக்கும், பத்திரிகைத்துறைசால் நண்பர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் நண்பர்களுக்கும் எமது அமைப்பினது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,
இவ்வண்ணம்,

கந்தையா சிவநேசன்
வட மாகாண சபை உறுப்பினர்
19.08.2015.