Header image alt text

எமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் – புளொட் ஜேர்மன் கிளை-

ploteநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கிலும் கிழக்கிலும் கழகத்தின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு ஆதரவளித்தமைக்காக தமிழ்; மக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

இந்த வெற்றிக்காகச் செயற்பட்ட நண்பர்கள், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவிப்பதோடு, வெற்றியடைந்த தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தோழர் சதாசிவம் வியாளேந்திரன் ஆகிய இருவருக்கும் எமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மேலும் இவர்கள் இருவரும் எமது மக்களுக்கான சேவையினை தொடர்ந்து ஆற்றுவதற்கு கழகத்தின் ஜேர்மன் கிளை சார்பில் எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்பதையும் உறுதிகூறுகின்றோம். Read more

ஏழாலை மேற்கில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு புளொட் தலைவர் வாழ்த்து- (படங்கள் இணைப்பு)

elalai (3)யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலின்கீழ் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வசிக்கும் திரு. வே.மணிவண்ணன் அவர்களது அனுசரணையுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கான இலவச புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஏழாலை மேற்கில் நடைபெற்ற இம்முறை ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் கடந்த 13.08.2015 அன்று நடைபெற்றபோது புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தார்கள்.

Read more

அவுஸ்திரேலிய ஆளுநர் புதிய உயர்ஸ்தானிகரிடையே சந்திப்பு-

sfdfdfdஅவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுள்ள சோமசுந்தரம் ஸ்கந்தகுமாருக்கான நியமனக்கடிதத்தை அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்குரோவ், கன்பெராவிலுள்ள அரச இல்லத்தில் வைத்து இன்று வழங்கிவைத்தார்;. இந்த நிகழ்வில், புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோருக்கும் இடையே கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆளுநர் நாயகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையுடன் உறுதியான பங்குதாரராக இருப்போம்-பிரித்தானியா-

britishஇலங்கையில் நல்லிணக்கமும் நீண்ட சமாதானமும் உருவாகியுள்ள நிலையில், இலங்கை அரசுடன் ஒரு உறுதியான பங்குதாரராக நாம் இருப்போம் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹமொன்ட் தெரிவித்துள்ளார். நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த வெற்றிக்கொண்டாட்டதின்போது பிரித்தானிய அரசின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார். இம்முறை நடைபெற்ற தேர்தல் விதமானது, இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பிரதமர் ரணில் விக்கி;ரமசிங்கவுடனும் புதிய அரசாங்கத்துடனும் தொடர்ந்து நல்லுறவைப் பேண எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசுடன் இணைந்து செயற்பட தயார்-சீனா-

sri lanka chinaபுதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக சீனா நம்புவதாக தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் ஹ_வா சுனின் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நடைபெற்று முடிந்த தேர்தல் ஒழுங்குமுறையாக மற்றும் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பாரப்பதாகவும் கூறியுள்ளார்.

உதய கம்மன்பிலவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை-

uthaya kammanvilaகுற்றப்புலனாய்வுத் திணக்களத்திற்கு தன்னை வரவழைத்து 2மணி நேரத்திற்கும் அதிகமாக தன்னிடம் விசாணை மேற்கொண்டதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை ஒருவருடன் இணைந்து நிறுவனம் ஒன்றின் பணத்தை மேசடி செய்ததாக தனக்கெதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றுகாலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். தன்மீது சேறுபூசும் நோக்கில் பொய்யான முறைப்பாடொன்றை சம்பிக ரணவக்க மேற்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் தன்னை விசாரணைக்காக அழைத்தபோதிலும், தேர்தல் ஆணையாளரின் உத்தரவிற்கிணங்க தேர்தல் முடிந்தபின் இன்று தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சஷி வீரவன்ச நிதி மோசடிப்பிரிவில் ஆஜர்-

sashiதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச இன்று பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளார். இதேவேளை சஷி வீரவன்சவிற்கு செஹாசா உதயந்தி ரணசிங்க என்ற பெயரிலும் தேசிய அடையாள அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சஷி வீரவன்ச இரண்டு முறை நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் வசித்து வருகின்ற கடுவலையில் உள்ள இல்லம் மற்றும் அதன் காணி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி, லால் காந்த பதவி விலகல்-

thondaஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவியொன்று கிடைக்கபெறவுள்ளதாக தெரியவருகிறது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 61,897 விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டார். இந்நிலையில், அமைச்சுப்பதவி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இ.தொ.கா.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தேசிய அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் பொருட்டே தான் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார். லால் காந்த இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இத்தாலி செல்ல முயன்ற யாழ்ப்பாண யுவதி கைது-

airportஅபுதாபி சென்று அதனூடாக இத்தாலி செல்ல முயன்ற யுவதியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த யுவதியை இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அன்பு இல்லத்திற்கும் பாரதி இல்லத்திற்கும் வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பு-

vvயாழ். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக நேற்றைய தினம் முத்தையன்கட்டு அன்பு இல்லத்திற்கும், முள்ளியவளையில் உள்ள பாரதி இல்லத்திற்கும் 90,000 ரூபா நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந் நிதியானது கனடா வாழ் புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில் வசிக்கும் திருமதி பரணி தர்மராஜா அவர்கள் 30,000 ரூபாவும், கனடாவில் வசிக்கின்ற திருமதி தம்பு சித்திரா அவர்கள் 10,000 ரூபாவும், கனடாவில் வசிக்கும் திரு. குமாரசாமி பிரபாகரன் அவர்கள் 50,000 ரூபாவும் நிதியுதவி செய்துள்ளனர்.
(தகவல் – வட்டு. இந்து வாலிபர் சங்கம் – படங்கள் இணைப்பு)

Read more

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சுதந்திரக் கட்சி அனுமதி-

slfpதேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதியளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான 6பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அனுமதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார் இத்தகவலை சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேடகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எவ்வாறான ஒத்துழைப்புகளை சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளது. இதற்கு புறம்பாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் யாரும் செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.