எமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் – புளொட் ஜேர்மன் கிளை-

ploteநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கிலும் கிழக்கிலும் கழகத்தின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு ஆதரவளித்தமைக்காக தமிழ்; மக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

இந்த வெற்றிக்காகச் செயற்பட்ட நண்பர்கள், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவிப்பதோடு, வெற்றியடைந்த தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தோழர் சதாசிவம் வியாளேந்திரன் ஆகிய இருவருக்கும் எமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மேலும் இவர்கள் இருவரும் எமது மக்களுக்கான சேவையினை தொடர்ந்து ஆற்றுவதற்கு கழகத்தின் ஜேர்மன் கிளை சார்பில் எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்பதையும் உறுதிகூறுகின்றோம்.

நன்றி.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (Pடுழுவுநு)
ஜேர்மன் கிளை
20.08.2015.