தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சுதந்திரக் கட்சி அனுமதி-

slfpதேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதியளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான 6பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அனுமதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார் இத்தகவலை சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேடகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எவ்வாறான ஒத்துழைப்புகளை சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளது. இதற்கு புறம்பாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் யாரும் செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.