Header image alt text

வடக்கில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் அநீதி-(படம் இணைப்பு)

mullaiவிவசாய கமநல சேவைத் திணைக்களத்தின் கீழுள்ள பதவிகளுள் ஒன்றான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களாக 365பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கிலே இருக்கின்ற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவர்களுள் 29பேர் மாத்திரமே தமிழர்களாவர். மிகுதி 336பேருமே தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களாவர். அதாவது இவர்கள் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

தமிழ்மொழி தெரியாத இவர்களுக்கு இங்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதாக அமையாது. இதற்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு தேசிய அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகள் ஊடாக இவர்களைத் தெரிவுசெய்திருப்பதன் காரணமாக இதற்கு தெரிவான தமிழர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது. அத்துடன் நியமிக்கப்பட்டிருக்கும் சிங்களவர்கள் இங்கு நிரந்தமாக இருக்கப்போவதில்லை. இவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டு தங்கள் பிரதேசங்களுக்கு மாற்றலாகிச் சென்றுவிடுவார்கள். Read more

புதிய அரசில் மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

ministerssssமங்கள் சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கமைய மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சராகவும், டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே இவர்கள் பதவியேற்றதாக தெரியவருகின்றது.

விமல், தினேஷ், வாசு ஆகியோர் எதிர்க்கட்சி-

udayaபொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார உட்பட்ட பலர், எதிர்க்கட்சியில் இருப்பதற்கு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளதாக, பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலரும் எதிர்க்கட்சியிலேயே இருப்பர் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய அரசாங்கத்துடன் இருப்பதா அல்லது எதிர்க்கட்சியில் இருப்பதா என்று தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஏற்கெனவே அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

சங்கக்கார விடைபெற்றார், உயர்ஸ்தானிகர் பதவியேற்குமாறு கோரிக்கை-

sangaஇலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான குமார் சங்கக்கார, சர்வதேசப் போட்டிகளிலிருந்து இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றார். இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே அவர் ஓய்வுபெற்றார். சங்கக்கார விடைபெற்ற போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர், குமார் சங்கக்காரவுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டு குமார் சங்கக்காரவைக் கௌரவித்தனர். இந்தக் கௌரவிப்பு நிகழ்வின்போது கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, குமார் சங்கக்காரவுக்கு கோரிக்கை விடுத்தார். தனது நன்றியறிதல் உரையில், தனது கிரிக்கெட் வாழ்வில் பங்களித்த அனைவருக்கும் நன்றி செலுத்திய குமார் சங்கக்கார, இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு அற்புதமானதொரு எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலிமேற்கில் தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் செயற்திட்ட உதவி-(படங்கள் இணைப்பு)

P1060805யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயற் திட்டத்தின் வாயிலாக ஜேர்மனிய புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதிப் பொருட்களை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி திருமதி. காந்தநேசன் அவர்களிடம் முன்னாள் தவிசாளர் அவர்கள் கையளித்துள்ளார்.

Read more