வலிமேற்கில் தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் செயற்திட்ட உதவி-(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயற் திட்டத்தின் வாயிலாக ஜேர்மனிய புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதிப் பொருட்களை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி திருமதி. காந்தநேசன் அவர்களிடம் முன்னாள் தவிசாளர் அவர்கள் கையளித்துள்ளார்.