பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் கைது-

prageethஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி இணையத்தளமொன்றில் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தார் அதன் பின்னர் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் லெப்டினன் கேர்ணல்கள் இருவரும், அலுவலக சார்ஜனும், கோப்ரல் ஒருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சில மணிநேரம் அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.