என்றும் நன்றிகள் பல-

P1060864நடைபெற்று முடிவடைந்த 2015ம் ஆண்டின் பாராளுமண்றப் பொதுத் தேர்தலின்போது எமது பிரதேசத்தில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர்ந்த வெற்றிக்கு வாக்களித்த அனைத்து தழிழ் தேசிய உறவுளுக்கும் தேசியத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யுத்தத்தின் வடுக்கள் மாறாத நிலையில் சலுகைகளை வழங்கி கடந்த கால நிகழ்வுகளை இருட்டடிப்புச செய்து எங்கள் மக்களின் வாக்கு வங்கிகளை சூறையட வந்த கயவர்களின் கூடாரங்களை நிர்மூலமாக்கி உரிமைக்காக அன்றுபோல் என்றும் நாம் தயார் என்பதனை உலகறியச் செய்து தழிழ் தேசியததின் வழியில் தடம் பதித்து தலைவனின் வழி நடக்க வழிசமைத்த அன்பினும் உயரிய உறவுகளுககு என்றும் நன்றி கூறுவதோடு என்றும் உங்கள் ஆணைப்படி உங்கள் தழிழ் தேசிய கூட்டமைப்பு வழி நடக்கும் என்ற உறுதியுடன் நன்றி கூறுகின்றேன்.

என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் முன்னாள் தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

அராலி உப அலுவலகத்தில் நூலகக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

P1060924யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி உப அலுவலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கன நூலகக் கண்காட்சியினை வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் மாணவர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

P1060924P1060904 P1060913 P1060914 P1060918 P1060920 P1060925 P1060930