தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு

adypirappu01அண்மையில் ஆடிப் பிறப்பு நிகழ்வினை ஒட்டி தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு சட்டத்தரனி செல்வி.சாருஜா.சிவநேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியில் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் பா.தணபாலன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போதுஇன்று இவ் நிகழ்வில் கலந்து கொள்வதனை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இவ் நிகழ்வின் வாயிலாக கடந்த கால எமது இனத்தின் பண்பாடுகள் பாரமபரியங்கள் இவ் இடத்தில் நிலை பெறுவதனை இட்டு மகிழ்ச்சியாகவே உள்ளது. கடந்த கால யுத்தம் அதன் பின்னரான கலப்பகுதியின் செயற்பாடுகள் மற்றும் புலம் பெயர்;வுகள் போன்ற பல நிகழ்வுகள் எமது பண்பாட்டின் பல பகுதிகளையும் சிதைவடைய வைத்துள்ளது. இவை மீண்டும் இவ்வாறான நிகழ்வுகள் வாயிலாக கட்டி வளர்க்கப்படவேண்டும் இதன் வாயிலாக பல விடயங்களும் எமது இனத்தின் இளையவர்கள் அறியக் கூடிய நிலை உருவாகும். இவ் நிலை வாயிலாக எமது இனத்தின் பல சிறப்புக்களையும் எப்படியும் வாழலாம் என்ற இனம் அல்ல எமது இனம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இலக்கு கொண்டவர்களாக வாழவேண்டியவர்கள் எனபது அறியக்கூடிய நிலை உருவாகும். இவ் வாறான எமது இனத்தின் சிறப்புக்களை எமது இனத்தின் முதியவர்கள் பலரும் அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு எடுத்து இயம்புவது காலத்தின் கட்டாயமாகவே கொள்ள வேண்டியுள்ளது. எமது இனத்தின் இருப்பு மற்றும் தனித்துவங்களை காட்டிநிற்பது எமது பண்பாட்டு அம்சங்களே. இவ்வாறான விழாக்களை மேற்கொள்பவர்களின் முயற்சியினைப் பாராட்டுகின்றேன். வாழ்த்துகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

adypirappu03adypirappu02adypirappu05adypirappu04