Header image alt text

மாற்றுத் திறனாளிகளின் உயர்வுக்கு உதவ வேண்டும்-கௌரவ.தர்மலிங்கம் சித்தர்த்தன்

ST05கடந்த 25.08.2015 அன்று கருவி ( மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு)  நிறுவனத்தினருக்கு முனனாள் வடமாகண சபை உறுப்பினரும்  புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் -கிளிநொச்சி பாராளுமன்ற உருப்பினருமான கௌரவ.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள் தனது வட மாகாண சபை நிதி ஒதுக்Pட்டிற்கூடாக அதி நவீன வசதி வாய்ந்த நிழல் பிரதி இயந்திரம் ஒன்றினை குறித்த அமைப்பின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இவ் நிகழ்வில் உரையாற்றும் போது இன்று உங்கள் மத்தியில் உள்ள தேவைகள் ஏராளமானவை. இவை யாவற்றையும் பூர்த்தி செய்வது என்பது மிகக்கடினமான ஓர் செயல்பாடு ஆகும். என்னால் இயன்ற வரை உங்களது முயற்சிகளுக்கு ஒத்துளைப்பினை இன்று போல் என்றும் வழங்க முயற்சிப்பேன். சமூகத்தில் உள்ள ஒவ்வேருவரும் இவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். உங்கள் மத்தில் பல திறமைகள் உள்ளமையையும் நான் நன்கு அறிவேன். இவ் திறைமைகளை வெளிப்படுத்துவதற்கு பல வகையிலும் தடைகள் உள்ளது. இவ் நிலையில் இவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சமூகத்தில் உள்ள ஒவ்வேருவரும் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

ST03JPGST02ST04JPGST01

இலங்கை ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பா.ம.உ. திரு. சித்தார்த்தன் சந்திப்பு

japan & T.S00japan & T.S0126.08.2015 அன்று யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான கௌரவ. தர்மலிங்கம்.சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில் ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார். இவ் சந்திப்பின் போது நடந்து முடிவடைந்த தேர்தலின் போது அமோக வாக்குகளினால் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரதிதிதியாக நாடாளுமன்றம் செல்கின்றமையை ஒட்டி வழ்த்துக்களை தெரிவித்ததோடு எதிர்வருங்காலங்களில் மக்களின் தேவைகளை உரிய முறையில் அடையாளங்கண்டு முன்வைக்குமாறும் கூறிக்கொண்டார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இன்றைய தழிழ் மக்களின் தேவைகள் மிக அதிகமாக உள்ளதற்கு மேலாக எம்மல் முன் வைக்கப்படுகின்ற மிக முக்கிய விடயம் நடந்து முடிவடைந்த இனப்படுகொலை தொடர்டபிலான சர்வதேச ரீதியிலான  விசாரனை முறையை உடனடியாக உரிய முறையில் அமுல்படுத்துவதற்காக பொறிமுறை தொhடர்டபில் தங்களது அரசின் ஆதரவு மிக முக்கியமாக வேண்டப்படுகின்றது என்பதனை சுட்டிக்கட்டினார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதியில் கடந்த கால யுத்தங்களால் பல தொழிற்சாலைகள் அழிவடைந்த நிலையில் உள்ளமையும் எதிர்காலத்தில் அவற்றினை மீளவும் கட்டி வளர்த்து வேலைவய்ப்பற்று இருக்கும் இங்குள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்பினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதே வேளை நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி உள்ள குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்களையும் வழங்க முன் வரவேண்டும். எனக்குறிப்பிட்டர். இதன் போது தூதரக அதிகாரி இவ் விடயம் தொடர்பில் பரிசீலிக்க  முடியும் எனவும் குறிப்பிட்டார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினருடன் திரு.செ.ஜெகநாதன் சந்திப்பு

vaddu hinduவலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் தமிழ் அலையூடாக  புலம் பெயர் உறவுகளுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற செயல் திட்டத்தின் ஊடாக வட்டுக் கோட்டை இந்து வாலிபர் சங்கம்  கடந்த கால யுத்தத்தினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு படுக்கை நிலையில் உள்ள நோயாளர்களுக்கான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பில் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் மேற்படி விடயத்தினைத் பிரான்ஸ் தமிழ் அலையூடாக  புலம் பெயர் உறவுகளுக்கு வழங்கிய நிலையில் பல புலம் பெயர் உறவுகள் தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தனர். இச் செயற்திட்டம் தொடர்பில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த  ஜேர்மனிய புலம் பெயர் உறவும் மேற்படி செயல் திட்டங்களில் உதவுவருமான திரு.செல்வதுரை.ஜெகநாதன் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக்காரியாலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு மேற்படி வியரங்களை நேரில் கேட்டறிந்ததோடு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் தொடாடபில் அறிந்து கொண்டதோடு எதிர்வரும் காலங்களில் தமது உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்ட தோடு எமது உதவிகள் தொடர்பில் எமது இணைப்பளராக இங்கிருந்து சமூகப்பணிக்காக சேவையாற்றி வரும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

மூளாய் வேரம் பகுதியில் நூலகம் திருமதி.நகரஞ்சினி. அவர்களால் திறந்து வைப்பு

muzhai01muzhai02வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நகரஞ்சினி. ஐங்கரன் அவர்களால் மூளாய் வேரம் பகுதியில் அமைந்துள்ள சுவாமி ஞாலப்பிரகாசர் பாலர் பாடசாலையின் நூல் நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.வலி மேற்கு பிரதேசத்தில் உள்ள 10 பாலர் பாடசாலையின் நூலகங்களிற்கு வேள்விசன் நிறுவனம் அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடக்கூடிய ஒன்றகும்.