மாற்றுத் திறனாளிகளின் உயர்வுக்கு உதவ வேண்டும்-கௌரவ.தர்மலிங்கம் சித்தர்த்தன்

ST05கடந்த 25.08.2015 அன்று கருவி ( மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு)  நிறுவனத்தினருக்கு முனனாள் வடமாகண சபை உறுப்பினரும்  புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் -கிளிநொச்சி பாராளுமன்ற உருப்பினருமான கௌரவ.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள் தனது வட மாகாண சபை நிதி ஒதுக்Pட்டிற்கூடாக அதி நவீன வசதி வாய்ந்த நிழல் பிரதி இயந்திரம் ஒன்றினை குறித்த அமைப்பின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இவ் நிகழ்வில் உரையாற்றும் போது இன்று உங்கள் மத்தியில் உள்ள தேவைகள் ஏராளமானவை. இவை யாவற்றையும் பூர்த்தி செய்வது என்பது மிகக்கடினமான ஓர் செயல்பாடு ஆகும். என்னால் இயன்ற வரை உங்களது முயற்சிகளுக்கு ஒத்துளைப்பினை இன்று போல் என்றும் வழங்க முயற்சிப்பேன். சமூகத்தில் உள்ள ஒவ்வேருவரும் இவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். உங்கள் மத்தில் பல திறமைகள் உள்ளமையையும் நான் நன்கு அறிவேன். இவ் திறைமைகளை வெளிப்படுத்துவதற்கு பல வகையிலும் தடைகள் உள்ளது. இவ் நிலையில் இவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சமூகத்தில் உள்ள ஒவ்வேருவரும் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

ST03JPGST02ST04JPGST01