உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை!- வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல்

tamilஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை. கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம்.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அதற்கிடையில் அமெரிக்கா இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவலையளிப்பதாகவும்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் வெற்றியளிக்கவில்லை.
சர்வதேச பிரதிநிதிகளின் கண்காணிப்பில் உள்நாட்டில் நடந்துள்ள விசாரணை ஆணைக்குழுக்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ள சூழ்நிலையில், பெருமளவிலான அரசியல் கைதிகள் இன்னும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும். 
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் தெரிவித்தார். 

இரண்டு கட்சிகள் மாத்திரம் சேர்ந்து அமைப்பது தேசிய அரசாங்கமாகுமா? மனோ கணேசன்

manoஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும்.

அதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சு பதவிகளை கைப்பற்றிகொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கமாக அழைக்கப்படலாம்.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து கொண்டால்தான், இது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இங்கே சிலர் தேசிய அரசாங்கம், தேசிய ஐக்கிய அரசாங்கம் ஆகிய இரண்டு சொற்களையும் போட்டு குழப்புகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். Read more