தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் -உதவி 8

வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் தழிழ் ஒலி வானொலிக்கூடாக புலம் பெயர் உறவுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற உதவித்திட்டடத்தின் 8வது உதவித்திட்டம் சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்ட உதவியின் வாயிலாக அண்மையில் அராலி ஊரத்தி பகுதியில் 21 பாடசாலை மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.பொறுப்பாளர்,டி.ஆர்.டி தழிழ் ஒலி,பிரான்ஸ்.
பெரு மதிப்புடையீர்,
arali05தாயக உறவுகளை தலை நிமிரச் செய்வோம் மேற்படி திட்டத்தின் கீழ் தங்களது வானொலிக்கூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப்பணி தொடர்பில் Rohina Saifi, Hendschikerstc.30,5600 Lenzbarg. swiss  எனும் முகவரியில் இருந்து இஸ்லாமிய சகோதரி அவர்கள் இலங்கை ரூபா.6600.00  அனுப்பியிருந்தார். அவ் சகோதரியின் வேண்டுகோளின் பிரகாரம் எமது பிரதேசத்திலுள்ள அராலி மத்தி ஊரத்தி எனும் கிராமத்தில் உள்ள வசதி குறைந்த 21 மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. ,தற்குரிய புகைப்படங்கள், வழங்கப்பட்ட மணவர் விபரங்கள், இவற்றினை நெறிப்படுத்தி வழங்கியவரின் கடிதம் மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்ட பற்றுசீட்டு என்பன இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது. இதே வேளை பாசத்துடன் இவ் அன்பளிப்பினை வழங்கிய சகோதரிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் மக்கள் சேவையில்,
திருமதி. நாகரஞ்சினி. ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர், 
வலி மேற்கு பிரதேச சபை.

arali01 arali02 arali03 arali04