திட்டமிட்ட வகையில் மாணவர் சமூகத்தினை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிரான விழிப்புணர்வு

valiwest01அண்மையில் வலி மேற்கு பிரதேசத்திற்கு உடபட்ட பாடசாலை மாணவர்களை இணைத்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையை வடமாகாண நல்லொழுக்க சம்மேளனம் நடாத்தியது. இவ் நிகழ்வானது சித்தன்கேணி சிவன்தேவஸ்தான முன்றலில் ஆரம்பித்து சங்கானை மத்திய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரமுகர்கள் பலரும் உரையாற்றினர். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில்

இன்று நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இவ் போதைப் பொருள் பயன்பாடு என்பது சமூக ரீதியாக பல தாக்கங்களை எமது சமூதாயத்திலும் ஏற்படுத்தி வருகின்றது. இதற்கும் மேலாக பத்திரிகைகள் மற்றும் இணையத்தள செய்திகளின் அடிப்படையில் இதன் தாக்கம் பாடசாலை மாணவர்களை நோக்கியதாகவும் ஏற்படுத்தப்பட்டு வருவது மனதிற்கு மிகுந்த வேதனையைத்தருகின்ற ஒர் செயற்பாடாகவே அமைந்துள்ளது. ஒரு சில கவனக்கலைப்பான்கள் வாயிலாக மாணவர்களையும் அவர்களது கல்விப்புலத்தினின்றும் மாற்றியமைப்பதற்கு இப் போதைப்பொருள் வியாபாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான நிலைகளில் இருந்து எமது இளைய தலை முறை காப்பாற்றப்பட வேண்டும் இவ் நிலையை சமூகம் முழுமையாக அவதானிக்க வேண்டும். எமது இனத்தினுடைடய எழுச்சிக்கும் உறுதிக்கும் காரணமானவர்கள் இவ் இளைய சமூகத்தினர் இவ் இளைய சமூகம் தொடர்பில் இவ்வாறான தவறான பழக்கங்களை உருவாக்கி அதன் வாயிலாக இவர்களைப் பலவீனமுள்ளவர்களாக மாற்றுவதன் வாயிலாக எமது இனத்தின விடிவு நோக்கிய நகர்வில் தளம்பலை ஏற்றடுத்த பலரும் செயற்பட்டு வருகின்றனர் இவ் நிலையில் இனத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் தேசியத்தின் விடியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ் சூழலில் விளிப்பாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. போதைப் பொருள் அற்ற ஆரோக்கியமான ஓர் சூழலை உருவக்கிக் கொள்வதற்கக ஒன்றினைவோம். எனக்குறிப்பிட்டார்.
இவ் நிகழ்வில் பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர்,சுகாதார வைத்திய அதிகரி, யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன், சபா.வசுதேவக்குருக்கள், வன.செபஸ்டியன் அன்டனி, வலி மேற்கு முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் வலி மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் வர்த்தகசங்க அங்கத்தினர் பிரதேசபாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

valiwest02 valiwest03 valiwest04 valiwest05 valiwest06 valiwest07JPG valiwest08JPG valiwest09JPG