ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை-

afkhanஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி இலங்கை வந்துள்ளார். புதுடில்லியில் இருந்து இன்று மாலை 3.25க்கு வந்த இந்திய விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் விசேட உரையாற்றவென அவர் இலங்கை வந்துள்ளார். ஹமிட் கர்சாயியுடன் மேலும் 7 இராஜதந்திரிகளும் இலங்கை வந்துள்ளதாகவும் அவர்கள் 2ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர் என்றும் கூறப்படுகிறது.