எதிர்க்கட்சித் தலைவர் தெரிவில் தலையிடப் போவதில்லை-ஜனாதிபதி-

maithripala3நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.