Header image alt text

மாற்றுத் திறனாளிகளின் உயர்வுக்கு உதவ வேண்டும்-கௌரவ.தர்மலிங்கம் சித்தர்த்தன்

ST05கடந்த 25.08.2015 அன்று கருவி ( மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு)  நிறுவனத்தினருக்கு முனனாள் வடமாகண சபை உறுப்பினரும்  புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் -கிளிநொச்சி பாராளுமன்ற உருப்பினருமான கௌரவ.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள் தனது வட மாகாண சபை நிதி ஒதுக்Pட்டிற்கூடாக அதி நவீன வசதி வாய்ந்த நிழல் பிரதி இயந்திரம் ஒன்றினை குறித்த அமைப்பின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இவ் நிகழ்வில் உரையாற்றும் போது இன்று உங்கள் மத்தியில் உள்ள தேவைகள் ஏராளமானவை. இவை யாவற்றையும் பூர்த்தி செய்வது என்பது மிகக்கடினமான ஓர் செயல்பாடு ஆகும். என்னால் இயன்ற வரை உங்களது முயற்சிகளுக்கு ஒத்துளைப்பினை இன்று போல் என்றும் வழங்க முயற்சிப்பேன். சமூகத்தில் உள்ள ஒவ்வேருவரும் இவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். உங்கள் மத்தில் பல திறமைகள் உள்ளமையையும் நான் நன்கு அறிவேன். இவ் திறைமைகளை வெளிப்படுத்துவதற்கு பல வகையிலும் தடைகள் உள்ளது. இவ் நிலையில் இவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சமூகத்தில் உள்ள ஒவ்வேருவரும் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

ST03JPGST02ST04JPGST01

இலங்கை ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பா.ம.உ. திரு. சித்தார்த்தன் சந்திப்பு

japan & T.S00japan & T.S0126.08.2015 அன்று யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான கௌரவ. தர்மலிங்கம்.சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில் ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார். இவ் சந்திப்பின் போது நடந்து முடிவடைந்த தேர்தலின் போது அமோக வாக்குகளினால் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரதிதிதியாக நாடாளுமன்றம் செல்கின்றமையை ஒட்டி வழ்த்துக்களை தெரிவித்ததோடு எதிர்வருங்காலங்களில் மக்களின் தேவைகளை உரிய முறையில் அடையாளங்கண்டு முன்வைக்குமாறும் கூறிக்கொண்டார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இன்றைய தழிழ் மக்களின் தேவைகள் மிக அதிகமாக உள்ளதற்கு மேலாக எம்மல் முன் வைக்கப்படுகின்ற மிக முக்கிய விடயம் நடந்து முடிவடைந்த இனப்படுகொலை தொடர்டபிலான சர்வதேச ரீதியிலான  விசாரனை முறையை உடனடியாக உரிய முறையில் அமுல்படுத்துவதற்காக பொறிமுறை தொhடர்டபில் தங்களது அரசின் ஆதரவு மிக முக்கியமாக வேண்டப்படுகின்றது என்பதனை சுட்டிக்கட்டினார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதியில் கடந்த கால யுத்தங்களால் பல தொழிற்சாலைகள் அழிவடைந்த நிலையில் உள்ளமையும் எதிர்காலத்தில் அவற்றினை மீளவும் கட்டி வளர்த்து வேலைவய்ப்பற்று இருக்கும் இங்குள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்பினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதே வேளை நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி உள்ள குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்களையும் வழங்க முன் வரவேண்டும். எனக்குறிப்பிட்டர். இதன் போது தூதரக அதிகாரி இவ் விடயம் தொடர்பில் பரிசீலிக்க  முடியும் எனவும் குறிப்பிட்டார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினருடன் திரு.செ.ஜெகநாதன் சந்திப்பு

vaddu hinduவலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் தமிழ் அலையூடாக  புலம் பெயர் உறவுகளுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற செயல் திட்டத்தின் ஊடாக வட்டுக் கோட்டை இந்து வாலிபர் சங்கம்  கடந்த கால யுத்தத்தினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு படுக்கை நிலையில் உள்ள நோயாளர்களுக்கான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பில் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் மேற்படி விடயத்தினைத் பிரான்ஸ் தமிழ் அலையூடாக  புலம் பெயர் உறவுகளுக்கு வழங்கிய நிலையில் பல புலம் பெயர் உறவுகள் தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தனர். இச் செயற்திட்டம் தொடர்பில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த  ஜேர்மனிய புலம் பெயர் உறவும் மேற்படி செயல் திட்டங்களில் உதவுவருமான திரு.செல்வதுரை.ஜெகநாதன் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக்காரியாலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு மேற்படி வியரங்களை நேரில் கேட்டறிந்ததோடு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் தொடாடபில் அறிந்து கொண்டதோடு எதிர்வரும் காலங்களில் தமது உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்ட தோடு எமது உதவிகள் தொடர்பில் எமது இணைப்பளராக இங்கிருந்து சமூகப்பணிக்காக சேவையாற்றி வரும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

மூளாய் வேரம் பகுதியில் நூலகம் திருமதி.நகரஞ்சினி. அவர்களால் திறந்து வைப்பு

muzhai01muzhai02வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நகரஞ்சினி. ஐங்கரன் அவர்களால் மூளாய் வேரம் பகுதியில் அமைந்துள்ள சுவாமி ஞாலப்பிரகாசர் பாலர் பாடசாலையின் நூல் நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.வலி மேற்கு பிரதேசத்தில் உள்ள 10 பாலர் பாடசாலையின் நூலகங்களிற்கு வேள்விசன் நிறுவனம் அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடக்கூடிய ஒன்றகும்.

 

 

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை புறக்கணிக்கிறதா த.தே.கூ?

sureshதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் தமது கட்சியை புறக்கணித்து செயற்படுவதாக, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

எனினும் குறித்த கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தேசியப் பட்டியலில் உறுப்பினர்களைத் தெரிவு செய்த போதும் தமது கட்சியின் கருத்தினை கவனத்தில் கொள்ளவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

தினம் தினம் இவ்வாறு செய்யின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பது குறித்து தமது கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு
 
epdpஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளோம். ஏனெனில் அவர்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக உறுதியளித்துள்ளனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது முடிவு பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.

எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்
 
Ariyanendiranஎனது முடிவினை நான் பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். என்மீது அதிருப்தி இருக்குமானால் எனக்கு வாக்களிக்கவேண்டாம் என நான் மக்களிடம் தெளிவாக கூறியிருந்தேன். ஆனால் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என கூறியிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

எங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் செயலாளர் புதியவர், பழையவர்கள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் அரசியலை சினிமாபோன்று சித்தரித்துள்ளனர். புதிய நடிகர்களை வைத்து படத்தினை தயாரிக்கும்போது கூடிய வசூலைபெறுகின்ற பாணியாக இந்த அரசியல் நிலைமையை பார்த்துள்ளார்கள்.

அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் எங்கள் பொதுச்செயலாளர். எதிர்வரும் காலத்தில் நடக்கும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இதுதொடர்பில் எனது ஆட்சேபனையினை தெரிவிக்கவிருக்கின்றோம்.

 

 

வடமாகாண சபை செயல்பாடு குறித்து உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் எதிர்ப்பு

linganathanஇலங்கையின் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு பிரேரணையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் குறைகூறியுள்ளார்.
தீர்மானங்களை தன் ஆடையில் ஒட்டியபடி வந்த வட மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன்.
வடமாகாண சபையில் கடந்த காலங்களில் சுமார் 200 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவுபடுத்திய லிங்கநாதன், அந்தப் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என எழுத்து மூலம் கேள்வி செவ்வாய்க் கிழமையன்று கேள்வியெழுப்பினார். Read more

புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப்பிரமாணம்

parliamentபுதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக செப்டம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்த தருணத்தில் இதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சராக டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐ.நா அமர்வில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா
 
usa sriஅடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பான பிரேரணை ஒன்றை ஆதரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read more

த.தே.கூ காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்! சுரேஷ்
 
sureshநடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது த. தே. கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். Read more

தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு

adypirappu01அண்மையில் ஆடிப் பிறப்பு நிகழ்வினை ஒட்டி தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு சட்டத்தரனி செல்வி.சாருஜா.சிவநேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியில் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் பா.தணபாலன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது Read more

பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் கைது-

prageethஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி இணையத்தளமொன்றில் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தார் அதன் பின்னர் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் லெப்டினன் கேர்ணல்கள் இருவரும், அலுவலக சார்ஜனும், கோப்ரல் ஒருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சில மணிநேரம் அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

என்றும் நன்றிகள் பல-

Posted by plotenewseditor on 25 August 2015
Posted in செய்திகள் 

என்றும் நன்றிகள் பல-

P1060864நடைபெற்று முடிவடைந்த 2015ம் ஆண்டின் பாராளுமண்றப் பொதுத் தேர்தலின்போது எமது பிரதேசத்தில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர்ந்த வெற்றிக்கு வாக்களித்த அனைத்து தழிழ் தேசிய உறவுளுக்கும் தேசியத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யுத்தத்தின் வடுக்கள் மாறாத நிலையில் சலுகைகளை வழங்கி கடந்த கால நிகழ்வுகளை இருட்டடிப்புச செய்து எங்கள் மக்களின் வாக்கு வங்கிகளை சூறையட வந்த கயவர்களின் கூடாரங்களை நிர்மூலமாக்கி உரிமைக்காக அன்றுபோல் என்றும் நாம் தயார் என்பதனை உலகறியச் செய்து தழிழ் தேசியததின் வழியில் தடம் பதித்து தலைவனின் வழி நடக்க வழிசமைத்த அன்பினும் உயரிய உறவுகளுககு என்றும் நன்றி கூறுவதோடு என்றும் உங்கள் ஆணைப்படி உங்கள் தழிழ் தேசிய கூட்டமைப்பு வழி நடக்கும் என்ற உறுதியுடன் நன்றி கூறுகின்றேன்.

என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் முன்னாள் தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

அராலி உப அலுவலகத்தில் நூலகக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

P1060924யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி உப அலுவலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கன நூலகக் கண்காட்சியினை வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் மாணவர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more

வடக்கில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் அநீதி-(படம் இணைப்பு)

mullaiவிவசாய கமநல சேவைத் திணைக்களத்தின் கீழுள்ள பதவிகளுள் ஒன்றான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களாக 365பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கிலே இருக்கின்ற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவர்களுள் 29பேர் மாத்திரமே தமிழர்களாவர். மிகுதி 336பேருமே தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களாவர். அதாவது இவர்கள் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

தமிழ்மொழி தெரியாத இவர்களுக்கு இங்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதாக அமையாது. இதற்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு தேசிய அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகள் ஊடாக இவர்களைத் தெரிவுசெய்திருப்பதன் காரணமாக இதற்கு தெரிவான தமிழர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது. அத்துடன் நியமிக்கப்பட்டிருக்கும் சிங்களவர்கள் இங்கு நிரந்தமாக இருக்கப்போவதில்லை. இவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டு தங்கள் பிரதேசங்களுக்கு மாற்றலாகிச் சென்றுவிடுவார்கள். Read more