தேசிய பட்டியல் நியமனத்தை இரத்துச் செய்யக்கோரி மனு தாக்கல்-

dew gunasekaraஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குணசேகரவினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் உட்பட 44 பேரின் பெயர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோத செயலென மனுதாரர் கூறியுள்ளதுடன், அது மக்கள் ஆணைக்கு எதிரானது என்பதுடன் அந்த நியமனங்களை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளார்.

சபை முதல்வராக லக்ஸ்மன் கிரியல்ல கடமையேற்பு-

laksman kiriyellaநாடாளுமன்ற சபை முதல்வராக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இன்று தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்ற சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் தமது கடமைகளை பெறுப்பேற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர், சிலர் ஐ.தே.கட்சியால் தனியாக ஆட்சியமைக்க முடியாத என கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு, தனியொரு கட்சி கட்டமைப்பின்படி தீர்வு காணமுடியாது என்ற காரணத்தினால் கூட்டு அரசாங்கத்தின் ஊடாக அதனை நிவர்த்திக்க முடியும். நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று அவசியமாகிறது. சர்வதேச ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஐ.தே.கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார். இதேவேளை புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளது. பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரண குணவர்த்தனவுக்கு தொடர் விளக்கமறியல்-

sarana gunawardenaதேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன தொடர்ந்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்குவதற்கு கம்பஹா மாவட்ட பிரதான நீதவான் டிகிரி கே ஜயதிலக மறுத்ததையடுத்தே அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் நான்காம் திகதி வரை சிறைச்சாலையில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சரண குணவர்த்தனவை ராகம அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலை அதிகாரி இதன்போது தெரிவித்திருந்தார். சிறைச்சாலை வைத்தியசாலையொன்று உள்ளநிலையில் சரண குணவர்த்தன அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் காரணத்தை எதிர்வரும் 4ம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு நீதவான் சிறை அதிகரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு-

accidentமுல்லைத்தீவு, மல்லாவி ஒட்டக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தரப் பரீட்சைக்கு சென்றுகொண்டிருந்த மாணவனான தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) உயிரிழந்துள்ளதுடன், எஸ்.சுஜீவன் (வயது 20) என்ற மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். மல்லாவி மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான இவர்கள், உயர்தர புவியியல் பாடப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது, இ.போ.சபை பஸ்ஸ{டன் மோட்;டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த இருவரையும் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்த மாணவன் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.