தொடர்கிறது வட்டு மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம்-(படங்கள் இணைப்பு)
மூன்றாவது நாளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் தலையிடாமல் தொடர்கின்றது வட்டு மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம். தமிழ் கல்விச் சமூகம் பேர் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் தமக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் வீதி மறியல் போராட்டம் செய்யப்போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாண கல்வி அமைச்சர் மாணவர்களின் போராட்டத்தில் அசமந்தப்போக்கை கையாள்வது மாணவர்களுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிந்திய செய்தியின்படி மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் அதிபர் இடமாற்றத்திக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பெயரில் எதிர்வரும் இரண்டு நாட்களும் பாடசாலை மூடப்பட்டுள்ளது (வட்டு இந்து வாலிபர் சங்கம்)