எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthanதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப் படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான கட்சிகள் தேசிய அரசாங்க கட்டமைப்பில் இணைந்து செயற்படகின்றன. இந்தநிலையில். மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களே எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு உசிதமானவர் என சித்தார்த்தன் எம்.பி குறிப்பிட்டார். தேசிய அரசாங்கத்தின் ஒன்றிணைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்ற வரைமுறைகளை மிக நேர்த்தியாக பின்பற்றுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.