கல்வியால் உயர்வதே சமூக உயர்வுக்கு ஒரே வழி-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-
யாழ்ப்பாணம் மூளாய் சுவாமி ஞானப்பிரகாசர் முன்பள்ளியின் வருடாந்த விளையாடடுப் போட்டி குறித்த முன்பள்ளி மைதானத்தில்; இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபையின் முனனாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு அவர் உரையாற்றும்போது, கடந்தகால யுத்தங்களால் நாம் பல வேதனைகளையும் பல குறிப்பிட்டுக்கூற முடியாத இழப்புக்களையும் சந்தித்து இருக்கின்றோம் இவ் இழப்புக்களின் வடுக்கள் என்றும் மாறாதவையாகவே உள்ளது. இவ் நிகழ்வு எம் ஒவ்வோர்வருடைய மனங்களிலும் உள்ளது. வரலாறு எமது வழிகாட்டி என்பதனை மனதில் கொண்டவர்களாக வரலாற்றின் வழி இடம்பெற்ற ஒவ்வோர் நிகழ்வுகளையும் மனதில் கொண்டு எமது அடுத்த தலைமுறை புதிய வரலாறு ஒன்றினைப் படைத்திட ஒவ்வோர் தழிழ் குடிமகனும் முயற்சிக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமான தேவையாக உள்ளது. ஒர் நீண்ட அழிவாயுத யுத்தத்தின் பின்னர் இன்று ஓர் அறிவாயுத யுத்தத்திற்கு தயாரானவர்களாக நாம் எம்மை தயார்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இவ் அறிவாயுத யுத்தத்தில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றவர்களாக மாற வேண்டிய நிலை உள்ளது. இதற்கான ஒரே வழி எமது சமூகத்தினை கல்வியில் உயர்நிலை அடையச் செய்வதே ஆகும். இந் நாட்டில் பாலர் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் வரை வழங்கப்ட்டுள்ள இலவசக் கல்வியினை முழுமையாக உரிய முறையில் இன்றைய தலைமுறை பெற்று உயர்ந்ததிட சமூகத்தில் உள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும். கல்வி என்ற ஒரு சொத்து மட்டுமே இன்று எம்மிடம் எஞ்சியுள்ள நிலை உள்ளது. இவ் கல்விக்கூடாகவே உயரிய நிலையை எதி;ர்காலத்தில் பெறக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு நல்ல முன்னுதாரணங்களை காண்பிக்கவேண்டும் அதன் ஊடாக எதிர்காலத்தில் குறித்த இலட்சியம் நோக்கி அவர்கள் பயணிப்பதற்கான நிலை உருவாக்கப்பட வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும் என குறிப்பிட்டார்.