பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சந்திப்பு-

prime ministerபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சுமார் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை-

234343434சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்னணியும், யாழ்.பல்கலைக்கழகத்தினரும் இணைந்து யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்றுமாலை 4மணியளவில் கையொப்பம் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். மத குருமார், கன்னியாஸ்திரிகள், பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும், ஊழியர் சங்கத்தினர், தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு தமது ஆதரிவினை தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலையில் காணாமல் பேனவர்களின் நினைவு தினம்-

4கிழக்கு பல்கலைக்கழக வளாக நலன்புரி முகாமிலிருந்து கடந்த 05.9.1990 அன்று காணாமல் போன 158 தமிழ் மக்களினதும் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்றுகாலை பல்கலைகழகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மேற்படி உறவுகளை இராணுவத்தினரே கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் நினைவு கூறுவோம் எனும் தலைப்பில் எளிமையான முறையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. தாம் வேண்டுவெதெல்லாம் புதை குழி அல்ல புன்னகை மனிதர்களையே என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன. அத்துடன் காணால் போனவர்களின் நினைவாக விளக்குகளும் ஏற்றப்பட்டன. இதன்போது பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு-

ministriesபுதிதாக சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட அமைச்சர்கள் சிலர் நேற்றைய தினமே தங்களின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க ஆகியோர் தங்களின் பதவிப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். மேலும் சில அமைச்சர்கள் இன்றையதினம் தங்களின் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.