Header image alt text

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை-(படங்கள் இணைப்பு)

st sign 05.09.2015இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மூன்றாவது நாளாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் நேற்;று முன்தினம் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இரண்டாம் நாள் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தபோது, புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

Read more

வட்டு. மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது-

v8யாழ் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்றுமாத காலப்பகுதியின் பின்னர் மாற்றுவதற்கு நடவடிக்கையெடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இரண்டாம் தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்பு பகிஸ்கரிப்பினை மாணவர்கள் மேற்கொண்டனர். இதனையடுத்து வார இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பாடசாலை மூடப்பட்டது.

இதன் பின்பு இன்றுகாலை 9 மணியளவில் பாடசாலை அதிபரின் கடிதமூல வேண்டுகோளின் அடிப்படையில் பிள்ளைகளின் தாய் தந்தையர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஒர் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் வடமாகாண, கல்வி அமைச்சின் செயலாளர் திரு அ.ரவீந்திரன், மாகாண கல்விப்பணிப்பாளர் திரு செ. உதயகுமார், மாகாணகல்வி உதவிச்செயலாளர் திருமதி சுகந்தி மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு செ.சந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

Read more

நாடுகடத்தப்பட்டவர்கள் கைது-

airportபோலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த சிரியா பிரஜை உட்பட இலங்கையர்கள் ஐவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் ஐவர் உட்பட வெளிநாட்டு பிரஜையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்; நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மந்தாரபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், பிரான்ஸ், கீறீஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கே செல்வதற்கு முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர், பிரான்ஸ நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளனர். மட்டக்களப்பைச்சேர்ந்தவர் கிறிஸ் நோக்கியும் மன்னாரை சேர்ந்தவர் அபுதாபியூடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்தவர் ஜேர்மனுக்கு பயணிக்க முயற்சித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சிரிய நாட்டுப் பிரஜை போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் ஐவரையும் வெளிநாட்டு பிரஜையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

நானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் – பிரதமர்-

ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் தூக்கமற்ற இரு சாரதிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மற்றையவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டமையால் நாம் இன்று இங்குள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டு விழா நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். தேசிய அரசாங்கம் என்பது நான்கு சந்திகளைக் கொண்ட அதிவேக வீதிக்கு ஒப்பானது என குறிப்பிட்ட பிரதமர், வளைவுகள் இல்லாமையால் பயணம் வேகமாகவும் நிறுத்தம் இன்றியும் செல்வதாகவும் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டால் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்புண்டு எனவும் குறிப்பிட்டார். இதனால் தானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் என அவர் தெரிவித்தார். ஜனவரி 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் 17ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் அனைத்து மக்களின் வாழ்வையும் சிறப்புற செய்ய வேண்டிய பொறுப்பை தாமும் ஜனாதிபதியும் ஏற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றிய பின் நாட்டை உங்களிடம் ஒப்படைப்போம் என இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டு இந்து வாலிபர் சங்கம் நிதியுதவி-

m5துணவியைச் சேர்ந்த க.புஸ்பமலர் என்ற பெண்ணுக்கு சங்கானை சுகாதார பணிமனையின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் பிரசவத்திற்கு எந்தவிதமான வசதிகளும், உதவிகளும் இல்லாத நிலையில், பிரசவத்திற்கு தேவையான 5000 ரூபா பெறுமதியான பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 04.09.2015அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

மஹிந்த பிரதமராகியிருந்தால் பாரியளவில் கொலைகள்-சந்திரிகா குமாரதுங்க-

chandrikaஅண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலைசெய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளயிட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ் ஆட்சியையே நடத்தியிருந்தார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு அழுத்தங்களில் இருந்து விடுபடுவதே அவர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க முற்பட்டதன் நோக்கம் எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இந்தியா மிகவும் விஷேடமானது. முதலீடு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை. தெற்காசியாவில் இந்தியாவின் பங்கு, பூகோள ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் கேந்திர முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது, எனவும் கூறினார். மேலும் இங்கு கருத்து வெளியிட்ட சந்திரிகா,

Read more

சர்வதேச விசாரணை தேவையில்லை-பிள்ளையான்-

pillayanசர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் யுத்தம் நடைபெற்றது. போரென்றால் அங்கு ஈவிரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்பதை போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன். புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர். பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள். இந்நாட்டில் புலிகள் அழிந்த பின்னர்தான் ஒரு சமாதானம், நிம்மதி வரும் என நாங்களும் உறுதியாக நம்பினோம். ஆனால் அந்த யுத்தத்தின்போது தமிழ் மக்கள் கேடயமாக பயன்படுத்தப்பட்டு அழிந்தது வேதனையான விடயம். யுத்தகாலப் பகுதியில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது நாங்கள் சரத் பொன்சேகாவிடம் பசில் ராஜபக்ஷவிடம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எல்லாம் இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.

Read more