நானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் – பிரதமர்-

ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் தூக்கமற்ற இரு சாரதிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மற்றையவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டமையால் நாம் இன்று இங்குள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டு விழா நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். தேசிய அரசாங்கம் என்பது நான்கு சந்திகளைக் கொண்ட அதிவேக வீதிக்கு ஒப்பானது என குறிப்பிட்ட பிரதமர், வளைவுகள் இல்லாமையால் பயணம் வேகமாகவும் நிறுத்தம் இன்றியும் செல்வதாகவும் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டால் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்புண்டு எனவும் குறிப்பிட்டார். இதனால் தானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் என அவர் தெரிவித்தார். ஜனவரி 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் 17ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் அனைத்து மக்களின் வாழ்வையும் சிறப்புற செய்ய வேண்டிய பொறுப்பை தாமும் ஜனாதிபதியும் ஏற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றிய பின் நாட்டை உங்களிடம் ஒப்படைப்போம் என இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டு இந்து வாலிபர் சங்கம் நிதியுதவி-

m5துணவியைச் சேர்ந்த க.புஸ்பமலர் என்ற பெண்ணுக்கு சங்கானை சுகாதார பணிமனையின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் பிரசவத்திற்கு எந்தவிதமான வசதிகளும், உதவிகளும் இல்லாத நிலையில், பிரசவத்திற்கு தேவையான 5000 ரூபா பெறுமதியான பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 04.09.2015அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)