Header image alt text

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கு தீர்மானமில்லை-

briberyஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை வருமாறு: லஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் கலைக்கப்பட உள்ளதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவை அமைத்தல் அதற்கான அங்கத்தவர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் என்பன 19வது அரசியல் யாப்பின்படி நடைபெறவேண்டும். அதன்படி, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவை கலைப்பதற்கு அதிகாரம் இல்லை. எவ்வாறானபோதும் அரசியல் யாப்பு சபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல ஆணைக்குழுக்களுக்கும் ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

aarpattam (2)யுத்தக் குற்ற விசாரணையின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்க அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ப்பாட்டகாரர்கள், இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் ஒப்படைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில் அனுமதி-

vasவர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இவர் சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது. பின்னர் வாஸ் குணவர்த்தன கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டுச் சந்தேகநபர்கள் கைது-

shootingகொழும்பு – புளுமெண்டல் பகுதியில் கடந்த ஜூன் 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனா வழங்கிய போர்க்கால உதவி பற்றி பொன்சேகா கருத்து-

sarath fonsekaஇலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “சீனாவுடன் எப்போதும் இலங்கை நெருக்கமான உறவை பேணும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அடிப்படையில், சீனாவின் ஆதரவு இல்லையென்றால், போரை எம்மால் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது, எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பழமையான மற்றும் உறுதியான நண்பர்களுள் சீனாவும் ஒன்று. நாம் அந்த நாட்டுடன் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். அதனை நாம் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் சீனா எமக்கு செய்ததை நாம் மறந்து விடக்கூடாது, எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

32454545நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டு, தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தினார்கள். இதன்போது போராட்டக்காரர்கள், வடமாகாணத்தில் 2300ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள். கடந்த அரசாங்கத்தினால், முகாமைத்துவ உதவியாளர்களாக பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடமாகாண அமைச்சுக்களின் கீழ் புதிய ஆளணி வெற்றிடங்களாக 1478 பேரின் விபரங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அந்த அனுமதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

Read more

வைபர் தொழிநுட்பம் கடந்த அரசுக்கு தெரியாது-சந்திரிக்கா-

chandrikaகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு வெளித் தரப்பினரும் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இந்திய புதுடெல்லியில் இடம்பெற்ற ஹிந்து மற்றும் பௌத்த மத மாநாட்டில் கலந்துகொண்டு, பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தியா செய்மதித் தொழிநுட்பத்தின் ஊடாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புகளை பேணி வந்ததா என வினவப்பட்டது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_2682தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளைத் தலைவர் சக்தி செல்வராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களால் நகரசபை மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு இரா. சம்பந்தன் அவர்களுக்கான கௌரவிப்பு கூட்டம் இடம்பெற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் திரளாக வந்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் தவிர கட்சித் தலைவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் தண்டாயுதபாணி, துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
Read more