Header image alt text

அமைச்சுக்களின் செயலாளர்களின் விபரம்-

sri lanka (4)அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் சில அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு,

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு – வீ.சிவஞானஜோதி
நிதி அமைச்சு – ஆர்.எம்.எச்.சமரதுங்க
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு – எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன
பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு – டப்ளியூ.எம்.வீ.நாரம்பனாவ
கல்வி அமைச்சு – டப்ளியூ.எம்.பந்துசேன
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு – உதய ஆர்.செனவிரத்ன
போக்குவரத்து அமைச்சு – நிஹால் சோமவீர
பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு – டப்ளியூ.எஸ்.கருணாரத்ன
புத்தசாசன அமைச்சு – வசந்த ஏக்கநாயக்க
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு – ஜீ.எச்.எல்.விமலசிறி பெரேரா

Read more

இடைத்தங்கல் முகாம்களில் 1584 குடும்பங்கள் தங்கியுள்ளன-

campவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் 1584 குடும்பங்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 முகாம்களிலேயே இவர்கள் தங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் 32 முகாம்களில் 1318 குடும்பங்களும் திருகோணமலையில் மூன்று முகாம்களில் 266 குடும்பங்களும் தங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். வலி வடக்கு, கிழக்கு மற்றும் திருகோணமலை சம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே இடைதங்கல் முகாம்களில் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களின் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை மீறல் அறிக்கை-

unஇலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 2ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் செப்டம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பில் 3மணித்தியாலங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி நடைப்பயணம்-

sivajiஇலங்கையின் போர்குற்றம் மற்றும் இன அழிப்புக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக பொறிமுறையினை நிராகரித்து, சர்வதேச விசாரனையினை வலியுறுத்தவும் இதனை தமிழ் மக்களிடையே எழுச்சி பெறச்செய்யவும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடைப்பயணம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன் ஆரம்பமாகி 5 நாட்களில் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் முடிவடையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி பேதம் இன்றி யாவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு அழைப்பு விடுக்கின்றேன். இது கட்சி சார்ந்த தேவை அல்ல. ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தேவை.

Read more

தாஜூடினின் கைத் தொலைபேசி நுவரெலிய இளைஞரிடமிருந்து மீட்பு-

vaseem thajudeenகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் றகர் வீரர் வசீம் தாஜூடினின் கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா – அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள இளைஞர் ஒருவரிடமே குறித்த கைபேசி இருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். வாகனத்தில் இருந்து தாஜூடினின் சடலம் மீட்கப்பட்ட நாரஹேன்பிட ஷாலிகா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் குறித்த தொலைபேசியை கண்டெடுத்துள்ளார். பின்னர் அவர் அதனை தன் மகனுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இரகசியப் பொலிஸாரால் குறித்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெடுக்கப்படும் உதவித்திட்டங்கள் பார்வையிடப்பட்டது-(படங்கள் இணைப்பு)

P1020342தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் டி.ஆர்.ரி. தமிழ் ஒலி ஊடாக முன்னாள் வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணியின் வாயிலாக லண்டணில் வசிக்கும் வைத்தியர். ரவி அவர்களால் போரின் வடுக்களால் இரண்டு கண்களையும் இழந்த நிலையில் தனது வாழ்வாதாரத்தினை சிறு கைத்தொழில் மூலமாக மேற்கொண்டுவரும் நபர் ஒருவருக்கு அவரது முயற்சியினை மேம்படுத்தும் பொருட்டு ரூபா. 50,000.00 வழங்கப்பட்டுள்ளது. இவ் நிதியுதவி வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் குறித்த பிரதேச சனசமூக நிலையத்தில் வைத்து நிலைய நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வு தெடர்பில் மேற்படி நிகழ்வுகளுக்கு உதவுபவர்களில் ஒருவரும் ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுமான திரு.செல்லத்துரை ஜெகநாதன் அவர்கள் குறித்த பயனாளியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று குறித்த பயனாளியுடன் கலந்துரையாடி அவரது செயற்திட்டங்களின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன், இவ்வாறு எதுவித உதவிகளுமஜன்றி துன்பப்படுபவர்கட்கு உதவத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அதேவேளை இவ்விடயத்தில் எமது இணைப்பாளராக செயற்பட்டு வரும் முன்னாள் வலி மேற்கு பிரதேசசபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். 

Read more

மத்திய மாகாணசபைக்குப் புதிய தலைவர் நியமனம்-

cemtra;மத்திய மாகாணசபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைச் சேர்ந்த எல் நிமலஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாணசபையில் சபைத்தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (8.9.2015 ) மத்திய மாகாணசபை கூடியது. இதன்போது மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கான எல். நிமலஸ்ரீ, மதியுக ராஜா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனால் இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது. 50 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 25 வாக்குகளை எல்.நிமலஸ்ரீயும் 22 வாக்குகளை மதியுகராஜாவும் பெற்றதுடன் 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 25 வாக்குகளைப் பெற்ற எல்.நிமலஸ்ரீ மத்திய மாகாணசபையின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரேணுகா ஹேரத்தும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜானக அயிலபெருமவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக சிறிசேனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவர் வீ.இராதாகிருஸ்னன்-

radhaஅமரர் பெரியசாமி சந்திரசேகரனின் தலைமைத்துவத்திற்கு கீழ் உருவான மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் மலைய மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவராக செயற்பட்டு வந்தவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று (2015.09.08) கொழும்பில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவிக்கின்றார். இந் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான ஏ.அரவிந்தகுமார், பிரதி செயலாளரும் விரிவுரையாளருமான விஜயசந்திரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்

Read more

20 ஆயிரம் சிரிய அகதிகளை ஏற்க பிரித்தானியா தீர்மானம்-

sriyaஉள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவில் இருந்து சுமார் 20 ஆயிரம் அகதிகளை ஏற்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. அடுத்து வரும் ஐந்து வருடங்களில் இந்த அகதிகள் ஏற்பு இடம்பெறும் எனவும் பிரதமர் டேவிட் கெமஷரூன் குறிப்பிட்டுள்ளார். மோதல்களினால் பாதிப்புக்குள்ளாகும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற தார்மீக அடிப்படையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டளஸ் அழகபெரும, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் விசாரணை, சஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு-

inquiryமுன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் முன்னிலையானார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அரச ஊடகத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டமைக்கான கட்டணங்கள் செலுத்தாமை குறித்தே இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார குழுவின் தலைவராக இவரே செயற்பட்டு வந்தார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். செலசினே எனப்படும் நிறுவனம் ஒன்றில் 11.4 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவாகரம் தொடர்பிலேயே அவர்மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more