இடைத்தங்கல் முகாம்களில் 1584 குடும்பங்கள் தங்கியுள்ளன-

campவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் 1584 குடும்பங்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 முகாம்களிலேயே இவர்கள் தங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் 32 முகாம்களில் 1318 குடும்பங்களும் திருகோணமலையில் மூன்று முகாம்களில் 266 குடும்பங்களும் தங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். வலி வடக்கு, கிழக்கு மற்றும் திருகோணமலை சம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே இடைதங்கல் முகாம்களில் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களின் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.