ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை மீறல் அறிக்கை-

unஇலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 2ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் செப்டம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பில் 3மணித்தியாலங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.