மத்திய மாகாணசபைக்குப் புதிய தலைவர் நியமனம்-
மத்திய மாகாணசபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைச் சேர்ந்த எல் நிமலஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாணசபையில் சபைத்தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (8.9.2015 ) மத்திய மாகாணசபை கூடியது. இதன்போது மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கான எல். நிமலஸ்ரீ, மதியுக ராஜா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனால் இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது. 50 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 25 வாக்குகளை எல்.நிமலஸ்ரீயும் 22 வாக்குகளை மதியுகராஜாவும் பெற்றதுடன் 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 25 வாக்குகளைப் பெற்ற எல்.நிமலஸ்ரீ மத்திய மாகாணசபையின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரேணுகா ஹேரத்தும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜானக அயிலபெருமவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக சிறிசேனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.