மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவர் வீ.இராதாகிருஸ்னன்-

radhaஅமரர் பெரியசாமி சந்திரசேகரனின் தலைமைத்துவத்திற்கு கீழ் உருவான மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் மலைய மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவராக செயற்பட்டு வந்தவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று (2015.09.08) கொழும்பில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவிக்கின்றார். இந் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான ஏ.அரவிந்தகுமார், பிரதி செயலாளரும் விரிவுரையாளருமான விஜயசந்திரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்

இ.ராஜாராம், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு அங்கத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தெடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ், அண்மைக் காலமாக தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரகேகரின் கொள்கைக்கும் அவர் மலையக மக்களின் மீது வைத்திருந்த பற்றுக்கும் ஏற்ப இனிவரும் காலங்களில் தொடர்ந்து மலையக மக்கள் முன்னணி செயற்படும். மலைய மக்களின் வளர்ச்சி பாதையில் அமரர் சந்திரசேகரின் பங்கு எவ்வாறு இருக்கின்றதோ அதேபோல் எதிர்காலத்தில் வேலைத் திட்டங்களும் புரட்சி மிகு கொள்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.