முன்னெடுக்கப்படும் உதவித்திட்டங்கள் பார்வையிடப்பட்டது-(படங்கள் இணைப்பு)
தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் டி.ஆர்.ரி. தமிழ் ஒலி ஊடாக முன்னாள் வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணியின் வாயிலாக லண்டணில் வசிக்கும் வைத்தியர். ரவி அவர்களால் போரின் வடுக்களால் இரண்டு கண்களையும் இழந்த நிலையில் தனது வாழ்வாதாரத்தினை சிறு கைத்தொழில் மூலமாக மேற்கொண்டுவரும் நபர் ஒருவருக்கு அவரது முயற்சியினை மேம்படுத்தும் பொருட்டு ரூபா. 50,000.00 வழங்கப்பட்டுள்ளது. இவ் நிதியுதவி வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் குறித்த பிரதேச சனசமூக நிலையத்தில் வைத்து நிலைய நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வு தெடர்பில் மேற்படி நிகழ்வுகளுக்கு உதவுபவர்களில் ஒருவரும் ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுமான திரு.செல்லத்துரை ஜெகநாதன் அவர்கள் குறித்த பயனாளியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று குறித்த பயனாளியுடன் கலந்துரையாடி அவரது செயற்திட்டங்களின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன், இவ்வாறு எதுவித உதவிகளுமஜன்றி துன்பப்படுபவர்கட்கு உதவத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அதேவேளை இவ்விடயத்தில் எமது இணைப்பாளராக செயற்பட்டு வரும் முன்னாள் வலி மேற்கு பிரதேசசபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.