டளஸ் அழகபெரும, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் விசாரணை, சஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு-

inquiryமுன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் முன்னிலையானார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அரச ஊடகத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டமைக்கான கட்டணங்கள் செலுத்தாமை குறித்தே இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார குழுவின் தலைவராக இவரே செயற்பட்டு வந்தார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். செலசினே எனப்படும் நிறுவனம் ஒன்றில் 11.4 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவாகரம் தொடர்பிலேயே அவர்மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 23 வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கொழும்பு கோட்டை நீதவான் பியந்த லியனகே முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, சஜீன்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் காலம் 22ஆம் திகதி வரையில் நீடிப்பதாக நீதவான் அறிவித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தன கடந்த மே மாதம் 11ஆம் திகதி குற்ற விசாரண திணைக்களத்தினால் கைது செய்யப்பட்;டமை இங்கு குறிப்பிடத்தக்கது.