Header image alt text

துயர் பகிர்கின்றோம்

Posted by plotenewseditor on 9 September 2015
Posted in செய்திகள் 

     துயர் பகிர்கின்றோம்

11998001_10204736845290744_877937414_n

யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சாரநிலைய வீதி, திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) சிரேஸ்ட உறுப்பினர் அமரர் அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி அவர்கள் (தோழர் கெனடி)

கழகக் கண்மணியே
கண்ணின் கருவிழியே!
என்ன சொல்லி அழுவதென்று
எதுவும் தெரியாது – சொல்ல
முடியாத் துயர் சுமந்து
சோர்ந்து நாம் நிற்கின்றோம்…

விபத்தென்ற போர்வையிலே
வீணாகிப் போனதுவே உன்னுயிர்
நேசம் மிகு தோழா!
கடைசி நொடிவரை கண்ணியமாய்
கழகப் பணி செய்த கண்மணியே
கனடித் தோழரே! Read more

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 9 September 2015
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்

ploteயாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சாரநிலைய வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி அவர்கள் இன்று 09.09.2014 புதன்கிழமை மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான தோழர் கெனடி அவர்கள் கழக மத்தியகுழு உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பருத்துத்துறை நகரபிதாவுமாவார். தனது பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த சிரேஸ்ட உறுப்பினர் தோழர் கெனடி அவர்கள் மரணிக்கும் வரையில் கழகப் பணிகளைத் தொடர்ந்தவர்.

திருகோணமலையில் நேற்று முன்தினம் (07.09.2015) திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த தோழர் கெனடி அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்றுகாலை (09.09.2015) உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புகட்பு : 0771698146 (குமார்) 
                       0779235558 (சிவா) 

யாழ். நீதிமன்ற தாக்குதல், மூவர் பிணையில் விடுதலை-

jaffna courtsபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது. சம்பவம் தொடர்பாகக் கைதாகியவர்களில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேக நபர்கள் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் மூவரை அவர்கள் மீதான மூன்று வழக்கிலும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான 5ஆட்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி பொ. சிவகுமார், மாதத்தின் இறுதி ஞாயிறுகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, ஏனைய 21 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டு தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள்.

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன பிணையில் விடுதலை-

sarana gunawardenaதாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா பிரதம நீதவான் ரிக்கிரி கே ஜயதிலக்க முன்னிலையில் சந்தேகநபரான முன்னாள் பிரதி அமைச்சர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சரண குணவர்தன தலா 50 ஆயிரம் ஷரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதி ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையிலான நேரத்தில் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் முன்னாள் பிரதி அமைச்சருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்தல் காலத்தில் கம்பஹா நீதிமன்றக் கட்டடத் தொகுதி அருகே ஒருவர்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சரண குணவர்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.

வவுனியா பழனிமுருகன் ஆலயத் திருவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் பங்கேற்பு-

palani murugan (2)அண்மையில் இடம்பெற்ற வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனிமுருகன் ஆலய இறுதி திருவிழாவினில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சாள்ஸ் நிமலநாதன், திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, திரு. செல்வம் அடைக்கல நாதன் ஆகியோரும், இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள்)
rajendra isaikalaiganar2015ம் ஆண்டிற்கான மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.  இதன் ஒரு பகுதியாக வன்னி இசைக் கலைஞர் திரு. ராஜேந்திரா அவர்களுக்கு இசைக்கருவி (கீ போர்ட்) ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், சிறு கைத்தொழில் முயற்சிக்கான உதவி திருமதி. மீனாட்சி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் தண்டுவான் பிள்ளையார் ஆலயத்திற்கான ஒலிப்பெருக்கி சாதனமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வுகளில் ஜி.ரி. லிங்கநாதன் அவர்களுடன், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிவைத்தார். 

Read more

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சி நெறி-

Youthவடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் பொருட்டு, ´சுற்றுலாத்துறையும் விருந்தோம்பலும்´ எனும் தொனிப்பொருளில் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அப்பயிற்சிநெறிக்கான பாடசாலை இன்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலை யாழ். நகர் 3ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனும், கனேடிய பல்கலைக்கழக வதிவிட பிரதிநிதி எஸ்தர் மக்டோன்ஸ் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் எஸ் திலகராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். கனேடிய பல்கலைக்கழகமும், சர்வோதயமும் இணைந்து குறித்த கற்கை நெறியினை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தவற்றின்மீது அதிக தேவைப்பாடு இருக்கின்றது. சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்துவரும் நிலையில், போரின் பின்னரான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.

Read more

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

ministriesதேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள்
01. ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்
02. டிலான் பெரேரா – பெருந்தெருக்கள்
03. ரி.பி.ஏக்கநாயக்க – காணி
04. பிரியங்கர ஜயரட்ன – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு       இராஜாங்க அமைச்சர்
05. லக்ஷமன் யாப்பா – நிதி இராஜாங்க அமைச்சர்
06. வி.இராதாகிருஸ்ணன் – கல்வி
07. ரவி சமரவீர – தொழில் உறவுகள்
08. பாலித ரங்கே பண்டார – தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு இராஜாங்க அமைச்சர்
09. திலிப் வெதஆராச்சி – கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
10. நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் Read more