புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-
தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்கள்
01. ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்
02. டிலான் பெரேரா – பெருந்தெருக்கள்
03. ரி.பி.ஏக்கநாயக்க – காணி
04. பிரியங்கர ஜயரட்ன – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்
05. லக்ஷமன் யாப்பா – நிதி இராஜாங்க அமைச்சர்
06. வி.இராதாகிருஸ்ணன் – கல்வி
07. ரவி சமரவீர – தொழில் உறவுகள்
08. பாலித ரங்கே பண்டார – தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு இராஜாங்க அமைச்சர்
09. திலிப் வெதஆராச்சி – கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
10. நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
11. ருவான் விஜேவர்த்தன – பாதுகாப்பு
12. ஹிஸ்புல்லாஹ் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்
13. மொஹான் லால் கிரேரு – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
14. சம்பிக்க பிரேமதாஸ – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்
15. விஜயகலா மகேஸ்வரன் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
16. சுஜீவ சேனசிங்க – வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க
17. வசந்த சேனாநாயக்க – நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
18. வசந்த அலுவிகாரே – கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
19. சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே – நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
01. சுமேதா ஜி ஜயசேன – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் பிரதி அமைச்சர்
02. சுசந்த புஞ்சிநிலமே – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்
03. அமீர் அலி – கிராமிய பொருளாதாரம்
04. லசந்த அழகியவன்ன – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்
05. இந்திக்க பண்டாரநாயக்க – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர்
06. பைசல் காசிம் – சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர்
07. துலிப் விஜேசேகர – தபால் சேவைகள் பிரதி அமைச்சர்
08. லக்ஷமன் வசந்த பெரேரா – பெருந்தோட்ட கைத்தொழில்துறை பிரதி அமைச்சர்
09. நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்
10. துனேஸ் கன்கந்த – அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்
11. அனோமா கமகே – பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு பிரதி அமைச்சர்
12. ஹர்ச டி சில்வா – வெளிவிவகார பிரதி அமைச்சர்
13. அஜித் பி பெரேரா – மின்வலு மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர்
14. எரான் விக்ரமரட்ன – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
15. ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர்
16. அசோக்க அபேசிங்க – போக்குவரத்து
17. அருந்திக்க பெனாண்டோ – உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
18. தரநாத் பஸ்நாயக்க – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்
19. எச்.எம்.ஹாரிஸ் – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
20. கரு பரணவித்தான – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சர்
21. நிமல் லன்சா – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் செயலமர்வு- புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை காலை ஆரம்பமாகும் முதல் நாள் அமர்வின் சிறப்பு அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். இதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இந்நாட்டு நிரந்தர பிரதிநிதி ஸ{ப்நாய் நென்ட், அதன் ஆலோசகர் சார்ள்ஸ் சோவேள், உட்பட பல பிரமுகர்கள் விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
அமைச்சர்களாக மலிக், பைஸர், சொயிஸா மூவரும் பதவிபிரமாணம்- தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக மேலும் மூவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மலிக் சமரவிக்ரம அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சராக அமைச்சராக பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பைஸர் முஸ்தபா உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும் விஜித் விஜிதமுனி சொயிஸா நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் பிரதிநிதிகளை நியமித்தனர்- அரசியலமைப்பு பேரவைக்கான தங்களுடைய பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நியமித்துள்ளனர். ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவையும் நியமித்துள்ளனர்.