இன்றைய சிறார்களே நாளைய எமது முதலீடுகள்-வலிமேற்கு முன்னாள் தவிசாளர்-(படங்கள் இணைப்பு)
யாழ். சுழிபுரம் குடாக்கனை அம்பாள் முன்பள்ளியின் வருடாந்த விளையாடு விழாவானது முன்பள்ளியின் மைதானத்தில் முன்பள்ளி ஆசியர் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளார் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சமூக சேவகியும் சமாதான நீதவானுமாகிய திருமதி. புனிதவதி சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக சுழிபுரம் குடாக்கனை பேச்சியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருநது விருந்தினர்கள் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உத்தியோகபூர்வமாக பிரதம விருந்தினரால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளார் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது இன்று இவ் நிகழ்வில் கலந்து பல்வேறு நிகழ்வுகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அமர்திருக்கின்ற சிறார்களை அவதானிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மிகப் பொறுமையாக மிகுந்த அவதானத்துடன் செயல்பட்ட இவ் சிறார்களின் பண்புகள் மிக உயர்வானவையாக எதிர்காலத்தில் அமையும் என எதிர்பார்கின்றேன்.
இன்று எமது பிரதேசத்தில் பல முன்பள்ளிகள் சிறப்பாக இயங்கிவருகின்ற நிலையிலும் ஒவ்வோர் முன்பள்ளியிலும் பல்வேறு வகையில் பற்றாக் குறைகள் காணப்படுகின்றது. எனது காலப்பகுதியில் என்னல் இயன்ற வரை இவ் முன்பள்ளிகட்கு பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியினையும் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளையும் பெற்று வழங்கியுள்ளேன். இருந்தும் மேலும் பல குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. என்னைப் பொறுத்த வரையில் எமது முதலீடுகள் இன்றைய சிறார்களே இவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது முன்னேற்றத்திற்காக நாம் மேற்கொள்ளுகின்ற ஒவ்வோர் செயற்பாடுகளும் எதிர்காலத்தில் எமக்கு மிகுந்த பயன்மிக்கதாக அமையும்.
அவார்களை சமூக பொறுப்புணர்வு மற்றும் எமது தாய் நிலம் மீது பற்றுக் கொண்டவர்களாக நாம் உருவாக்க வேண்டும். இவ் நிலையினை அடையும் போதே எமது இனத்தின் வரலாறு எதிர்காலச் சந்ததிக்கு சென்றடையக்கூடிய வாய்ப்பு உருவகும். இன்றைய சூழலில் கடந்த கால யுத்தத்தினால் பலவற்றையும் இழந்து அவ் துன்பத்திலிருந்து மீள முடியாத நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இவ் துன்பங்களிற்கான பரிகாரம் இழப்பீட்டுத்தொகை அல்ல. இதனால் நாம் இழந்து தவிக்கின்ற எமது உறவுகளை மீண்டும் பெற்று விட முடியாது.
நாம் சந்தித்து வேதனைப்பட்ட ஒவ்வோர் நிகழ்விலிருந்தும் மீண்டும் எழுவதற்கான வழி கல்வி ஒன்றே ஆகும். இவ் கல்வியின் வாயிலாக உயர்நிலை பெற்று எம்மை அழிததவ்களையும் எமது அழிவினைக் கண்டும் காணாது இருந்தவர்கட்கும் நாம் யார் என்பதனை நல்ல உதாரணமாக காண்பிக்க வேண்டும். உலக மகாயுத்த்தில் முழூமையான அழிவை சந்தித்து இன்று உலகையே தனது தனித்துவ அறிவுத் திறமையால் ஆண்டு வருகின்ற யப்பான் நாடு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்திருக்கின்றமை யாவரும் அறிந்த உண்மை. இந்த வகையில் கல்வியால் உயர அனைவரது ஒத்துளைப்பும் மிக அவசியமான ஒன்றாகும் என குறிப்பிட்டார். இவ் நிகழ்வின் இறுதியில் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினரால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.