மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள்)

thuvi channkara2015ம் ஆண்டிற்கான மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு தொகுதியாக வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களினால் பட்டிக்குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கான ஒலிப்பெருக்கி சாதனங்கள் பிரதேசசபை உறுப்பினர் திரு செந்துரன், திரு ஆ.மகாலிங்கம் மற்றும் பாடசாலை அதிபர் திரு.பாக்கியநாதன் ஆகியோரின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களுக்கான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து வாழ்வாதார சிறு கைத்தொழில் உதவி பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவியானது னு.சு கனகரட்னம், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு.சந்திரகுலசிங்கம் ஆகியோரினால் கையளிக்கப்பட்டுள்ளது அத்துடன் மேற்படி நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் துவிச்சக்கர வண்டி ஒன்றும் பயனாளி ஒருவருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thuvi channkarapalani murugan pattikudiyiruppu pillaiyar piramaana adippadai