வட்டு. இந்து வாலிபர் சங்கம் வி.ராதிகாவுக்கு வாழ்த்துக்கள்-
யாழ். மீசாலையில் வசிக்கும் ராதிகா விக்கினராசா என்பவர் வன்னி பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காயமடைந்தார். அது மட்டுமல்லாது தனது சகல உடமைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு உலுக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தார். அதன் பின்பு அங்கிருந்து மீள இடம்பெயர்ந்து தனது சொந்த இடமான மீசாலையில் வசித்து வருகின்றார். இவரது கணவன் இறுதி யுத்தத்தின்போது காணாமல் போயுள்ளார். உயர்தரம் வரை கற்ற நிலையில் பல வேலைவாய்புகளுக்கு விண்ணப்பித்துள்ளார் எனினும் பட்டதாரி என்னும் தகைமை இல்லாததால் இவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. இச் சந்தர்பத்தில் இவர் இணையக் கல்விக் கழகத்தினூடாக தஞ்சாவூர் தமிழ் பல்லைக்கழகத்தில் டீயு பட்டப்படிப்பு கல்வியை தொடர்வதற்க்காக 21.05.2013 அன்று வட்டு இந்து வாலிhர் சங்கத்துக்கு தனது பட்டப்படிப்புக்காக 90000 ரூபா பண உதவி செய்து தரும்படி விண்ணப்பித்து இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவரின் கல்வி செலவுக்காக எம்மால் 90000 ஷரூபா தவணை அடிப்படையில் வழங்கப்பட்டு தற்போது இவரின் இறுதிபரிட்சை கடந்த யூன் மாதத்தில் முடிவடைந்துள்ள நிலையில் முதல்பிரிவில் சித்தியாகியுள்ளார். வி.ராதிகாவுக்கு வட்டு கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இதேபோன்று எம்மூடாக உதவி தேவைப்படும் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்கின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்து வாலிபர் சங்கத்தின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். (தகவல் – வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்)