Header image alt text

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_1507வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில், சிறிசங்கர் (பாபு)அனுசரணையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பாரதியின் பெருமைகளை பறைசாற்றும் கவிதையினை குரும்பையூர் ஜங்கரன் வழங்கியதுடன், தமிழ்மணி அகளங்கனின் “செந்தமிழும் நாப்பழக்கம்” எனும் நூலும் வெளியிடப்பட்டது. இவ் நிகழ்வில், வவுனியாவில் கம்பீரமாய் காட்சிதரும் சிலைகளை தமது காலத்தில் நிறுவி, தமிழையையும் சைவத்தையும் காத்த பெரியோர்களின் காவலன்கள் என வன்னியில் அழைக்கப்படும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், உப நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாவட்ட இணைப்பாளருமான திரு க,சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_15432015ம் ஆண்டிற்கான மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் (11.09.2015) வவுனியா கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில், பணிப்பாளர் வைத்திய கலாநிதி கனரத்தினம் தலைமையில், பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் பசு மாடுகளினை 17 பயனாளிகளும், நல்லின ஆடுகளை 7 பயனாளிகளும், கோழிகள் 41 வீதம் 42 பயனாளிகளும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளில் வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி. லிங்கநாதன் அவர்களுடன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு வ.பிரதீபன் அவர்களும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிவைத்தார்கள்.  Read more

சர்வதேச விசாரணை அவசியமில்லை-ருவன் விஜேவர்தன-

ruwanஇறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனஇந்த விடயத்தை கூறியுள்ளார். வெளிவிவகார பிரதியிமைச்சர் கலாநிதி ஷர்சடி சில்வா, பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் மொகான் லால் கிரேரு ஆகியோரும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடை பயணம் தொடர்கிறது-

sivajiசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில்நேற்று ஆரம்பமான நடை பயணம் இன்று பளையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய 2ஆம் நாள் பயணம் ஆணையிறவில் ஆரம்பமானது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்தவர்களும், காணாமற்போனவர்களின் உறவினர்களும் இந்த நடைப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஆரம்பமான இந்த நடை பயணம், யாழ். நல்லூரில் நிறைவு பெறவுள்ளது. இந்த பாதையாத்திரை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு-

americaஇனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவு உண்டென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார். கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். தேரர்களுடன் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இலங்கையின் கலாசாரம், பௌத்தம் பற்றி கூடுதலாக அறிந்து கொண்டேன். பௌத்த சமய அறிஞர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புகின்றேன். நல்லிணக்கம், ஒற்றுமைப்பட்ட ஜனநாயக, செழிப்பான, சுதந்திரமான சகலருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு, அமெரிக்கத் தூதரகமும், அமெரிக்காவும் உதவத் தயாராக இருக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லும்பினிக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு ஆலோசனை-

lumbiniமறு அறிவித்தல் கிடைக்கும்வரை லும்பினிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் நேபாலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. லும்பினியில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 யாத்திரிகர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் தற்போது இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், லும்பினிக்கு செல்வதற்கான பயண ஆலோசனைக்கும், லும்பினி பகுதிக்கு பயணித்துக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்புகொள்வதற்கு 0097714720623, 0097714720213 போன்ற இலக்கங்களுடன் இணைப்பை ஏற்படுத்துமாறு இலங்கைத் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

சஷி வீரவன்ச குறித்த விசாரணை நிறைவு-

sashiசட்டவிரோதமாக விதிமுறை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்பு பிரிவினர் இன்று (கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை-

caffeபல வருட காலமாக வழக்கு எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகிய அமைப்புக்கள் கேட்டுள்ளன. இந்த அமைப்புகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து, தொடராது 273 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 6,7 வருடங்களாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளபோதும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. Read more