வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_15432015ம் ஆண்டிற்கான மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் (11.09.2015) வவுனியா கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில், பணிப்பாளர் வைத்திய கலாநிதி கனரத்தினம் தலைமையில், பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் பசு மாடுகளினை 17 பயனாளிகளும், நல்லின ஆடுகளை 7 பயனாளிகளும், கோழிகள் 41 வீதம் 42 பயனாளிகளும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளில் வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி. லிங்கநாதன் அவர்களுடன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு வ.பிரதீபன் அவர்களும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிவைத்தார்கள். 

IMG_1543IMG_1544 IMG_1546 IMG_1553 IMG_1557 IMG_1558 IMG_1561 IMG_1564 IMG_1567